ஈரோடு · தமிழ்நாடு
ஈரோடு மஞ்சள் பொடி,
எங்கள் பண்ணையிலிருந்து நேரடியாக
GI அங்கீகாரம் பெற்ற ஈரோடு மஞ்சள், மூன்று தலைமுறைகளாக எங்கள் குடும்பப் பண்ணையில் விளைகிறது. கலப்படம் இல்லை, நிறம் சேர்க்கப்படவில்லை, இயற்கையாகவே 2.5% முதல் 3.5% குர்குமின். இடைத்தரகர்கள் இல்லாமல், பண்ணையிலிருந்து உங்கள் சமையலறைக்கு.
FSSAI உரிமம் 22426064000154 · இந்தியா முழுவதும் டெலிவரி

ஈரோடு மஞ்சள் ஏன் தரமானது?
ஈரோடு மாவட்டம் “இந்தியாவின் மஞ்சள் நகரம்” என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள மண்ணும், தண்ணீரும், காலநிலையும் மஞ்சள் சாகுபடிக்கு மிகவும் ஏற்றவை. இதை அங்கீகரித்து, 2019 ஆம் ஆண்டு ஈரோடு மஞ்சளுக்கு GI (புவிசார் குறியீடு) அங்கீகாரம் வழங்கப்பட்டது.
எங்கள் தாத்தா காளியப்பா, பாட்டி பொன்னம்மாள் — இவர்கள் பெயர்களைச் சேர்த்தே பொன்காளி என்ற பெயர் வந்தது. அவர்கள் அறுபது ஆண்டுகளுக்கு மேல் பயிரிட்ட அதே நிலத்தில், அதே விதையில், இன்றும் நாங்கள் மஞ்சள் விளைவிக்கிறோம்.
அறுவடை செய்த மஞ்சளை எங்கள் சொந்த மில்லிலேயே அரைக்கிறோம். அரைத்த 24 மணி நேரத்திற்குள் பொட்டலம் போடப்படுகிறது. கிடங்கில் மாதங்கள் தங்குவதில்லை, அதனால் வாசனையும் நிறமும் புதிதாகவே இருக்கும்.
மஞ்சள் பொடி விலை
அதிக அளவு எடுக்கும்போது கிராமுக்கான விலை குறையும். எல்லா பொட்டலங்களிலும் உள்ளது ஒரே மஞ்சள் தான்.
மொத்தமாக (bulk) வாங்க வேண்டுமா? ஹோட்டல், கேட்டரிங், கடை வைத்திருப்பவர்களுக்கு மொத்த விற்பனை பக்கத்தைப் பாருங்கள்.
கேள்விகள்
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
ஈரோடு மஞ்சள் என்றால் என்ன? அது ஏன் சிறப்பு?
ஈரோடு மாவட்டத்தின் மண்ணும் காலநிலையும் மஞ்சள் சாகுபடிக்கு மிகவும் ஏற்றவை. அதனால்தான் ஈரோடு மஞ்சளுக்கு 2019 ஆம் ஆண்டு GI (புவிசார் குறியீடு) அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதே மண்ணில், மூன்று தலைமுறைகளாக எங்கள் குடும்பம் மஞ்சள் விளைவிக்கிறது.
இந்த மஞ்சள் பொடியில் குர்குமின் அளவு எவ்வளவு?
இயற்கையாகவே 2.5% முதல் 3.5% வரை குர்குமின் உள்ளது. இது செயற்கையாக சேர்க்கப்பட்டது அல்ல, மஞ்சளிலேயே இயற்கையாக இருப்பது. நிறத்திற்காக எந்த ரசாயனமும், மாவும், அரிசி மாவும் கலக்கப்படவில்லை.
மஞ்சள் பொடியில் கலப்படம் உள்ளதா என்று வீட்டிலேயே எப்படி சோதிக்கலாம்?
ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் அரை டீஸ்பூன் மஞ்சள் பொடியைப் போடுங்கள். கலக்காமல் அப்படியே வையுங்கள். தூய மஞ்சள் மெதுவாக அடியில் தங்கும், தண்ணீர் வெளிர் மஞ்சள் நிறமாக இருக்கும். தண்ணீர் உடனே கடும் மஞ்சள் நிறமாக மாறினால், அதில் செயற்கை நிறம் கலந்திருக்கலாம்.
மஞ்சள் பொடியை எப்படி சேமித்து வைக்க வேண்டும்?
காற்று புகாத டப்பாவில், வெயிலும் வெப்பமும் படாத இடத்தில் வையுங்கள். ஈரமான கரண்டியை உள்ளே விடாதீர்கள். அப்படிச் செய்தால் நிறமும் வாசனையும் நீண்ட நாட்கள் மாறாமல் இருக்கும்.
எப்படி ஆர்டர் செய்வது? பணம் எப்படி செலுத்துவது?
இந்த இணையதளத்திலேயே ஆர்டர் செய்யலாம், அல்லது வாட்ஸ்அப்பில் 99440 33696 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். UPI, கார்டு, நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம், அல்லது பொருள் வந்த பிறகு பணம் செலுத்தும் (COD) வசதியும் உள்ளது.
டெலிவரி எவ்வளவு நாட்கள் ஆகும்?
ஈரோட்டிலிருந்து ஒன்று முதல் இரண்டு வேலை நாட்களுக்குள் அனுப்பப்படும். இந்தியாவின் பெரும்பாலான ஊர்களுக்கு மூன்று முதல் ஐந்து வேலை நாட்களில் கிடைக்கும். டெலிவரி கட்டணம் ஊருக்கும் எடைக்கும் ஏற்ப மாறும், அது கார்ட்டிலேயே தெரியும்.